இளைஞர்களின் மேம்பாட்டுக்கு வழிகோலும் உலக இளைஞர் மாநாடு : பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
இலங்கையில் நடைபெறவுள்ள 2014 உலக இளைஞர் மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இம்மாநாடு இலங்கையில் எதிர்வரும் மே மாதத்தில நடைபெறவிருப்பது குறித்து நாட்டில் உள்ள இராஜதந்திரிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், இந்த இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்கள் மூலம் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறதென்றும் தெரிவித்தார்.
இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக இலங்கை அரசாங்கம் பரந்த அடிப்படையிலான ஒழுங்குகளை செய்து வருகின்றது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இந்த உலக மகாநாடு வழிவகுக்கும். பொதுநலவாய இளைஞர் மன்றத்தில் தலைமைதாங்கும் என்ற முறையில் இளைஞர் தொடர்பான விவகாரங்களுக்கு இலங்கை முக்கியத்துவம் அளிக்கிறதென்றும் கூறினார்.
2015ம் ஆண்டுக்குப் பின்னர் இளைஞர் விவகாரங்களில் ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றங்களுக்கு இவ்வருடம் நடைபெறும் மாநாட்டில் தொனிப்பொருள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சகல அம்சங்களிலும் இளைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப் பார்கள். சிறந்த ஆளுமையை அமைத்தல், செயற்பாடுகள் பற்றிய உண்மையான தகவல்களை வைத்திருத்தல், இளைஞர்களின் உரிமைகளை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்துதல், இளைஞர்கள் எதிர்நோக்கும் சமத்துவமின்மையை சீரமைத்தல், பால்நிலை சமத்துவம், பின்தங்கிய நிலையில் உள்ள இளைஞர்களுக்கு வலுவூட்டுதல், வறுமையை ஒழித்தல், உணவுப்பாதுகாப்பை ஊக்குவித்தல், சுகாதார செயற்பாடுகளை நடைமுறைப்ப டுத்துதல், சுற்றாடலை பாதுகாப்பாக வைத்திருத்தல், சமாதானம் நல்லிணக்கப் பாட்டை ஏற்படுத்தல், சம கல்விக்கு வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தல், வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல், விளையாட்டுத்துறை கலாசார செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற செயற்பாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இளைஞர் உலக மாநாட்டினை சிறப்பிப்பதற்கு சமூகங்களின் பூரண ஒத்துழைப்பை பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, பிரதி கல்வி அமைச்சரும் இளைஞர் மற்றும் தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மொஹான் லால் கிரேரு, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனிக்கா செனவிரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply