புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சி: 10 பெண்கள் உட்பட 65 பேர் கைது

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினை மீண்டும் உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் 10 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை இலங்கை பொலிஸார் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 05 பேர் விசாரணைகளைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் ஏனையவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள பெண்களுள் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளடிப்படையில் மேற்படி சந்தேக நபர்களிடம் பாரியளவில் வெளிநாட்டுப் பணம் புழக்கத்தில் இருந்தமை தெரியவந்துள்ளதெனவும் அவர் சுட்டிக் காட்டினார். எல். ரீ. ரீ. ஈ. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய (கோப்பி) என்னும் சந்தேகநபர் உள்ளிட்ட தலைமறைவாகி யிருக்கும் சில புலி முக்கியஸ்தர்களை தேடும் முகமாக அண்மையில் வடக்கு, கிழக்கில் பொலிஸார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தேடுதல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த தேடுதல்களின்போதே புலி இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களென்ற சந்தேகத்தின்பேரில் மேற்படி 65 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply