விமானத்தில் இருந்து சிக்னல்கள் வருவது உறுதி: ஆஸி. பிரதமர்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை ஆஸ்திரேலிய மீட்பு படையினர் நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இன்று பெய்ஜிங்கிற்கு வருகைதந்த ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், “விமானத்தை தேடும் பணியில் இதுவரை எந்தவொரு தொய்வும் ஏற்படவில்லை. இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து இருந்து எங்களுக்கு சிக்னல்கள் கிடைத்திருப்பது உறுதி.

இதனால் விமானத்தை கண்டுபிடிப்பதில் எங்களது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கருப்பு பெட்டிக்கும் எங்களுக்கும் இடையே சில கிலோ மீட்டர்கள் இடைவெளிதான் உள்ளது” என்று தெரிவித்தார்.

இதகுறித்து ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹௌஸ்டன் கூறுகையில், “நாங்கள் விமானத்தை நெருங்கி விட்டது உறுதி. இதுகுறித்த தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply