நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு புத்தாண்டு ஓர் சிறந்த சந்தர்ப்பம் : ஜொன் கெரி
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஓர் சிறந்த சந்தர்ப்பமாக இந்த புத்தாண்டு அமைய வேண்டுமென அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி தெரிவித்துள்ளார். மலரவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விட்டுக் கொடுக்கக் கூடிய மனப்பான்மையுடன் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த புத்தாண்டு ஓர் சந்தர்ப்பமாக அமைய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் அமெரிக்க மக்களின் சார்பில், இலங்கை வாழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
சுபீட்சமான, ஜனநாயக இலங்கையைக் கட்டியெழுப்ப அமெரிக்கா சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply