விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை : பஷில் ராஜபக்ஷ
வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு நான் சந்தர்ப்பம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பது உண்மைதான் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும் வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் இன்னும் எதிர்பார்ப்பை கைவிடவில்லை என்றும் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்துவிடடதாக வெளிவந்த தகவல்கள் குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் நான் நாட்டின் அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றேன்.
அந்தவகையிலேயே வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆனால் அவர் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.
வட மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபடாவிடினும் இந்திய வீட்டுத்திட்டம் விடயத்தில் சில தொடர்புகள் உள்ளன.
எனவே அவ்வாறான விடயங்கள் குறித்து வட மாகாண சபை முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடும் தேவை உள்ளது. அவர் தற்போது சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காவிடினும் முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் நான் இன்னும் எதிர்பார்ப்பை கைவிடவில்லை. விரைவில் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply