சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய 22 நிலக்கரி சுரங்க ஊழியர்களின் நிலை?
சீனாவிலுள்ள யுனான் மாகாணத்திலுள்ள குயிலின் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பணியிலிருந்த 26 ஊழியர்கள் சிக்கி கொண்டுவிட்டனர். ஆனால் மீட்பு படையினரின் துரிதமான நடவடிக்கையால் அவர்களில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 1876 மீட்டர் உயரமுள்ள அந்த நிலக்கரிச்சுரங்கத்தில் சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய காலநேர நிலவரப்படி வெள்ளநீரின் உயரம் 4.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன இயந்திர வசதி மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாக“ அந்நாட்டு பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலக்கரிச்சுரங்கத்தின் வருடாந்திர உற்பத்தி ஆண்டுதோறும் சுமார் 60000 டன்னாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply