ஏ-9 வீதி திறக்கப்பட்டமைக்கு வரவேற்பு
யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதி திறக்கப்பட்டமை குறித்து அனைத்துப் பகுதிகளிலிருக்கும் உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் வரவேற்றுள்ளனர்.
இந்த ஏ-9 வீதி திறக்கப்பட்டிருப்பதால் சமூக பொருளாதாரத்தில் விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படுமென்பதுடன், மீனவர்கள், சிறிய மற்றும் பாரிய தொழிற்சாலைகள் தமது உற்பத்திப் பொருள்களை தென்மாகாணத்திற்கு அனுப்பமுடியுமெனவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மாத்திரமல்லாது, ஏனைய முன்னேற்றங்கள் ஏற்படுமென்பதுடன், வடக்கு மற்றும் தெற்கிற்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் காணப்படுமெனவும் யாழ் குடாநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது அரசாங்கத்திற்கும் ஏ-9 வீதி திறந்துவிடப்பட்டமைக்காக பல மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், துரித தபால் சேவை மற்றும் இலகுவாக போக்குவரத்துக்களை மேற்கொள்ளுவதற்கும் இந்த ஏ-9 வீதி உதவியளிக்கிறதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply