மோடியை ஆதரித்து பிரசாரம் செய்ய 700 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வருகை

குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் போட்டியிடும் அம்மநில முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்வதற்காக அமெரிக்காவில் வாழும் சுமார் 700 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியாவை முன்னேற்ற மோடியைப் போன்றதொரு வலிமையான தலைவர் நாட்டை வழிநடத்த வேண்டும் என்று விரும்பும் இவர்களில் சிலர், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நாட்டில் உள்ள இதர பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

குஜராத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இம்மாதம் 30-ம் தேதிக்குள் அமெரிக்காவில் வாழும் சுமார் ஐயாயிரம் குஜராத் மாநிலத்தவர்கள் வாக்களிப்பதற்காக தாயகத்துக்கு வருகைதர இருப்பதாக அமெரிக்காவில் வாழும் இந்திய தொழிலதிபர் பியுஷ் பட்டேல் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply