19, 20ம் திகதிகளில் ஜனாதிபதி கிழக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் 19, 20ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோ கபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அவர்கள் 19ம் திகதி மண்முனையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் மண்முனை பாலத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளார். 20ம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதுடன் அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டடத் தொகுதியையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கவுள்ளார்.

அதனையடுத்து ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறை விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிகளுக்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டிவைப்பார்.

மேற்படி நிகழ்வுகளில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் எஸ். பி. திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ. எல். எம். அதாஉல்லா உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

19ம் திகதி ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ள மண்முனை பாலம் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply