அமெரிக்க மக்களை வியப்புக்குள்ளாகிய ரத்த நிலா

சூரியனை பூமி சுற்றிவருகிறது. பூமியை சந்திரன் சுற்றிவருகிறது. இந்த நிகழ்வின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருகிறபோது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பிறகு தெரிவதே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் நேற்று காணப்பட்ட இவ்வகையிலான அரிய சந்திர கிரகணத்தை லட்சக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். வழக்கமாக, பால் பந்து போன்று தோன்றும் சந்திரன், இந்த கிரகணத்தின் போது, பூமியின் நிழல் தன் மீது விழுந்த வேளையில் மெல்ல, மெல்ல நிறம் மாறி, ரத்தத்தின் செந்நிறமாக காட்சியளித்ததால் இந்த கிரகணத்தின் போது சந்திரன் ‘ரத்த நிலா’வாக தெரிந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ஒவ்வொரு இடத்தின் நேர வேறுபாட்டுக்கேற்ப அமெரிக்க மக்கள் இந்த ரத்த நிலாவினை கண்டு ரசித்தனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பிரிஃபித் விண்வெளி கோளரங்கத்தின் அருகே உள்ளே புல்வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொலைநோக்கியின் மூலம் இந்த அபூர்வக் காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.

கிரகணம் மெல்ல, மெல்ல விலகத் தொடங்கியப் பின்னர் சிவந்து இருண்டிருந்த சந்திரன், மீண்டும் வெள்ளி நிலவாக மாறிய காட்சியை கண்ட சிறுவர், சிறுமியர் உற்சாகம் மிகுதியால் கைதட்டி, ஆர்ப்பரித்து, துள்ளிக் குதித்தனர்.

பவுர்ணமி என்று நாம் அழைக்கும் முழுநிலவு காலத்தில் ஏற்படும் சந்திர கிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் இதுபோன்று செந்நிறத்தில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் சுமார் 300 ஆண்டுகள் வரை இதைப்போன்ற கிரகணங்கள் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்க மக்களுக்கு இதைப்போன்ற முழுக் கிரகணங்களை3 மீண்டும் கானும் வாய்ப்பு வரும் அக்டோபர் மாதம் 8-ம் தேதியும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதியும், செப்டம்பர் 28-ம் தேதியும் மட்டுமே கிடைக்கும். அதை தவற விட்டவர்கள், 2032-ம் ஆண்டில் நிகழும் முழு சந்திர கிரகணம் வரையில் காத்திருக்க வேண்டியதாகி விடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply