மரபணு மாற்றிய அமெரிக்க சோளம் சீனா ஏற்க மறுத்ததால் ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு

சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா 3–ம் இடம் வகித்து வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் தேசிய விதையூட்ட கூட்டமைப்பு சார்பில், 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.18 ஆயிரம் கோடி) மதிப்புள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் சீனாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இதை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply