இலங்கை யுத்தத்தில் இந்திய இராணுவம் பங்களித்த விசாரணை? இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
இலங்கை இராணு வத்திற்கும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் இறுதி நாட்களில் இந்திய இராணுவத்தின் பங்களிப்பு குறித்து விசேட விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்ற த்துக்கு சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ராம் சங்கர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இந்த கோரிக்கை உச்சநீதி மன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற் பட்டது என்று மனுவை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் இந்திய வம்சாவளியினர் உட்பட தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச்சாட்டு க்களில் இந்திய ஆயுதப் படையினரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள வியூகத்தை அடிப்படையாக வைத்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்திய அரசாங்கம் இந்திய ஜனாதிபதியின் உத்தரவின்றியும் இந்திய அரசியல் சாசனத்திற்கு அமைய இந்திய பாரளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாமலும் இந்திய அரசாங்கம் தங்கள் இராணுவத்தை இலங்கையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் செயற்பட அனுமதித்து இருக்கிறது என்றும் திரு. ராம் சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply