பாஸ் நடைமுறை மீண்டும் அறிமுகமென்பது அப்பட்டமான பொய் கடற்படை பேச்சாளர்

மன்னாரில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீண்டும் பாஸ்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அவை வதந்திகள் மாத்திரமேயென கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சும் மீன்பிடித் திணைக்களமும் இதுகுறித்த யோசனைகளைக் கூட முன்வைக்காத நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே மேற்படி புரளி ஏற் படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஷ எமக்குக் கூறினார்.

இதுகுறித்த தகவல்களை மேலும் ஊர்ஜிதம் செய்யும் நோக்கில் மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் ஜஸ்டினை தொடர்பு கொண்டு கேட்டபோது மன்னார் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு எவ்வித பாஸ் முறைமையும் நடைமுறைப்படுத்தவில்லையெனவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு பாஸ் முறையை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் அவர் உறுதியாகக் கூறினார்.

தனிப்பட்ட நபரொருவரின் தன்னிச்சையான கருத்து மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் கடற்படையினரை சீண்டிப் பார்க்கும் வீண் முயற்சியாக வுள்ளதெனவும் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் விசனம் தெரிவித்தார்.

மன்னார் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீண்டும் பாஸ் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக பத்திரிகைகளில் வெளியான தவறான செய்தியைத் தொடர்ந்து தமது வாழ்வாதாரத் தொழில் பாதிப்படைந்து விடுமென மன்னார் மாவட்ட மீனவர்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் கொண்டுள்ளனர்.

மீனவர்களுக்கான பாஸ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லையெனவும் பாஸ் இல்லாமலேயே மீனவர்கள் கடலுக்குச் செல்லலாமென்றும் கடற்படைப் பேச்சாளரும் அமைச்சின் பேச்சாளரும் மன்னார் மாவட்ட சம்மேளனத் தலைவரும் சுட்டிக் காட்டியுள்ள அதேநேரம் வதந்திகள் குறித்து மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனுவும் வலியுறுத்தினார்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பாஸ் நடைமுறை படிப்படியாக நீக்கப்பட்டது. நாட்டில் தற்போது அமைதியும் சமாதானமும் நிலவுகின்ற இக்காலகட்டத்தில் மீண்டும் இம்முறைமை நடைமுறைக்கு வருவதாக புரளிகள் கிளப்பப்படுவது அரசாங்கத்திற்கும் கடற்படையின ருக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவ துடன் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியெனவும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாஸ் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்த யோசனையை கடற்படை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை அமைச்சோ திணைக்களமோ இதுகுறித்த எவ்வித நடவடிக்கை களையும் மேற்கொள்ளவில்லை யெனவும் நரேந்திர தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை 72 மீனவர் கிராமிய அமைப்புகளுக்குப் பொறுப்பாக மீன்பிடித்துறையமைச்சின் கீழ் மீனவ மாவட்ட சம்மேளனம் இயங்கி வருவதாக தெரிவித்த அதன் தலைவர் ஜஸ்டின் மாதாந்தம் அமைச்சில் நடைபெறும் கூட்டங்களுக்கு தான் சமுகமளிப்ப தாகவும் அவ்வாறான எந்தவொரு யோசனையையும் முன்வைக்கப்படா மையினால் புரளிகளை நம்பி மீனவர்கள் அச்சம் கொள்ளக் கூடாதெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply