நைஜீரியாவில் பள்ளிச்சிறுமிகளை கடத்தியது தீவிரவாத செயல்: ஹிலாரி கிளிண்டன்
நைஜீரியாவில் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 300 பேர் போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹிலாரி கிளிண்டன், நைஜீரிய அரசை உடனடியாக மீட்பு பணியை தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மாணவிகளை தீவிரவாத அமைப்பு கடத்தியிருப்பது வயிற்றிலடிக்கும் செயல். இது மிகப்பெரிய குற்றமாகும். இதுவும் தீவிரவாதத்தின் ஒரு வகை தான். இந்த செயலை தடுக்க வேண்டியது நைஜீரிய அரசின் கடமையாகும். கடந்த ஏப்ரல் 15ந் தேதி கடத்தப்பட்ட அச்சிறுமிகளுக்கு ஆபத்து நேரும் முன்பாகவோ, யாருக்கேனும் அடிமையாக விற்கப்படுவதற்கு முன்பாகவோ காப்பாற்றப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இத்தீவிரவாத குழுவின் தலைவனான அபுபக்கர், மாணவிகளை விற்றுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பொருட்டு அமெரிக்கா தன் பங்கிற்கு 10 வீரர்கள் கொண்ட படையை அனுப்பியுள்ளதாக ஹிலாரி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply