ஊழல் குற்றச்சாட்டு: தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை

தாய்லாந்தில் பிரதமராக இருந்தவர் யிங்லக் ஷினா வத்ரா (46). விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்த விவகாரத்தில் ஊழல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசுக்கு வெளிசந்தையை விட அதிக விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்தார். அதனால் விவசாயிகளுக்கு அரசால் பணம் பட்டுவாடா செய்ய முடியவில்லை. மேலும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செகரட்டரி ஜெனரல் தாவில் பிலன்ஸ்ரி என்பதை பதவி மாற்றம் செய்தார். இக்குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊழல் தடுப்பு கமிஷனில் பிரதமர் ஷிங்லக் ஷினாவத்ரா மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் குற்றவாளி என நீரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கு தற்போது பாராளுமன்ற செனட் சபைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஊழல் குற்றம் புரிந்த யிங்லக் ஷினா வத்ராவுக்குரிய தண்டனை முடிவு செய்யப்படும்.

இந்த வழக்கில் குற்றம் நீரூபிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி நீக்கம் செய்யப்பட்ட இவர் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

கடந்த 2011–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பெகுதாய் கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். 2 ஆண்டுகள் 9 மாதம் மற்றும் 2 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.

இவரது அண்ணன் தக்ஷின் ஷினாவத்ரா முன்னாள் பிரதமர். இவரும் ஊழல் வழக்கில் கடந்த 2006–ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ராணுவ புரட்சியால் விரட்டியடிக்கப்பட்ட இவர் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply