உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ ஏனைய சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வௌ;வேறு திகதிகளில இதனை கொண்டாடுகின்றன. இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் ‘சைபெலி’ என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்த கொண்டாட்டம் ‘மாதா’ திருக்கோவிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது.
இந்த நிலையில் தற்போது நவீன காலத்தில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி வித்தியாசமானது.
இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடும் ‘அன்னையர் தினம்’ அமெரிக்காவில் தான் உருவானது.
அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் ‘கிராப்டன்’ என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
அப்போது அங்கு நடந்த யுத்தக் களத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர்.
அப்படி பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், சமாதானத்துக்கும் கடுமையாக போராடியவர் தான் அனா ஜார்விஸ்.
இறுதியில் அவருடைய பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904-ம் ஆண்டில் மறைந்தார்.
அந்த பார்வையற்ற மகள் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் முதன்முதலாக தன் தாயின் நினைவாக உள்ளூரில் உள்ள தேவாலயத்தில்; 1908-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘சிறப்பு வழிபாடு’ ஒன்றை நடத்தினார்.
இந்த தினம் பின்னர் அன்னையர் தினமாக அனுஸ்ட்டிக்க காரணமாக அமைந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply