நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்: போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்கள் கடத்தல்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போராடி வரும் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு, கடந்த மாதம் சிபாக் பள்ளிக்கூட மாணவிகள் 276 பேரை கடத்திச்சென்று விட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில், நைஜீரிய ராணுவத்துடன், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் படைகளும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு பாலத்தை தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கடத்திச்சென்று உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா நேற்று ரேடியோவில் உரையாற்றியபோது, நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாணவிகள் கடத்தப்பட்டது அறிந்ததும் எங்கள் இதயம் நொறுங்கி விட்டது. கடத்தப்பட்ட மாணவிகளை நானும், எனது கணவரும் சொந்த மகள்களாக கருதுகிறோம்’ என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply