இன்று சித்திரா பெளர்ணமி தினம்

சித்திரா பூரணை விரதம் (பெளர்ணமி) செளரமாசூ (சூரிய மாதம்) அடிப்படை யிலேயே தீர்மானிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் இன்று (14) சித்திரா பெளர்ணமி விரதம் பூசை தீர்த்தோற்சவம் என்பன வெகு சிறப்பாக இடம் பெறுகின்றது. இன்றைய நான்நாள் இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் தெய்வ கடாட்சம் பொருந்திய தினமாகும்.

எமது நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பெளத்த சிங்கள மக்களுடன் இந்து தமிழ் மக்களும் ஆலயம் சென்று தமக்குரிய தெய்வங்களை வணங்குகின்ற புனித நாளாக காலம் காலமாக இருந்து வருகின்றது. நாட்டிலுள்ள சகல இடங்களிலும் வெசாக் அன்னதான சாலைகள், அலங்கார தோரணங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் பெற்றது வரையான காட்சிகள் சிறப்பாக மின்னொளியால் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்துக்கள் இன்று விரதமிருந்து தமது இறந்த தாயை நினைத்து சிரார்த்தம் தர்ப்பணம் என்பனவற்றுடன், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சாஸ்திரோக்தமானதாகும். சித்திரா பெளர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் நாளில் பசும்பால் பசுத்தயிர், பசு நெய் ஆகியவற்றை கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது உணவில் உப்பு சேர்க்க கூடாது ஏனெனில் பாவபுண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்திரா பெளர்மணி விரதம் இருக்கும் நாளில் இந்த நடைமுறை பின்பற்றல் வேண்டும்.

இன்று சித்ரகுப்தனின் சுலோகத்தை சொல்லி தியானித்து தீபம் தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சித்து வாசனைப் பொருட்கள் கலந்த சாதம் (பொங்கல்) நைவேத்தியம் படைத்து நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார வணங்குகிறேன் என பிராத்திக்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply