துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 137 பேர் பலி- 200 பேர் சிக்கித் தவிப்பு
துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் உள்ளே இருந்த பணியாளர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 17 பேர் பலியானதாகவும், சுரங்கத்திற்குள் தவித்த சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மின் விநியோக அலகு வெடித்ததால் தீப்பிடித்ததாகவும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுரங்கத்திற்குள் இருக்கலாம் என்றும் சோமா நகர நிர்வாகி தெரிவித்தார்.
சுரங்கத்திற்குள் இருப்பவர்களில் மேலும் சிலர் புகையால் மூச்சுத் திணறியோ அல்லது தீயில் கருகியோ இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் இறப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. சுரங்கத்திற்குள் இருக்கும் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க உள்ளே சுத்தமான காற்று செலுத்தப்படுகிறது.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியபடி சுரங்கப்பகுதிக்கு விரைந்தனர். மருத்துவமனைக்கு வெளியிலும் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர்.
துருக்கில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுரங்க விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 1992ல் கருங்கடல் துறைமுகம் அருகே நடந்த மோசமான சுரங்க விபத்தில் 270 பணியாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply