ஜனாதிபதியுடன் சோனியா காந்தி ஆலோசனை
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரங்கள் குறித்து பிரணாப் முகர்ஜியுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினாலும், அக்கட்சியின் குறிப்பிட்ட தலைவர்கள் மாற்றுக் கருத்துடன் உள்ளனர். அதாவது, பா.ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் மூன்றாவது அணி ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply