துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் உள்ள சோமா நகரின் மேற்குப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள ஒரு சுரங்கத்தில் சுமார் 800 பேர் பணியாற்றி வந்தனர்.நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து ‘ஷிப்ட்’ மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து 420 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
201 பேர் பிணமாகவும், 363 தொழிலாளிகள் உயிருடனும் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்டவர்களில் பலர் படுகாயமடைந்திருந்ததால் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. பலத்த தீக்காயமடைந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சுரங்கத்தின் உள்ளே சிக்கித் தவிக்கும் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply