கொழும்பு மாநகர சபையின் 150 ஆண்டு நிறைவு தின வைபவத்தில் பிரித்தானியா இளவரசர்
பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இவ்வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் 150 ஆண்டு நிறைவு தின வைபவங்கள் இவ்வருடம் நவம்பர் மாதம் 25ந் திகதி கொண்டாடப்படவுள்ளது. இக்கொண்டாட்டங்களின் பிரதம அதிதியாக இளவரசர் சார்ள்ஸ் கலந்து கொள்ளவுள்ளார் என்று கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டன், லீட்ஸ், ஹனோய், மாலே, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் முக்கிய 25 மாநகரங்களின் நகரபிதாக்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நகரபிதா முஸம்மிலின் தலைமையிலான விசேட குழுவொன்று மேற்கொண்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பழைய நகர மண்டபம் புதுப்பிக்கப்படவுள்ளதுடன், அதனை அண்டிய பகுதியை விசேட கொண்டாட்ட வலயமாக அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply