தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள நரேந்திரமோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து
இந்தியாவின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி, மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய பாரதீய ஜனதாக் கட்சியின்பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மத்திய அரசாங்கத்தில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வெற்றி தொடர்பில் நரேந்திர மோடிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஸ்திரமான அரசாங்கமொன்றின் மூலமே பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்.
அமோக வெற்றியின் மூலம் மோடி ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பார் என்பது மகிழ்ச்சியளி ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி, நரேந்திர மோடிக்கு அழைப்பு விடு த்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply