மே 18 அஞ்சலி நிகழ்வு நடாத்தினால் கைது செய்வோம்
எதிர்வரும் 18ம் திகதி பொது இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த முடியாது அதனையும் மீறி நடத்தினால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 18ம் திகதி தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினம் அத்தினத்தில் அஞ்சலி நிகழ்வு நடாத்த அனுமதிக்க முடியாது. என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த வாரம் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி உதயபெரெரவும் பொது இடங்களில் எதிர்வரும் 18ம் திகதி அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த முடியாது எனவும் மீறி நடாத்தினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply