யுத்த வெற்றியின் ஐந்தாண்டு நிறைவு இன்று மாத்தறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெற்றி விழா நிகழ்வு

முப்பது வருட காலமாக புலிப் பயங்கரவாதிகளின் கொடூரமான பயங்கரவாதப் பிடியில் சிக்குண்டிருந்த இலங்கைத் திருநாட்டினை வெற்றி கொண்ட யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன. யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் நாளை மாலை 4.00 மணிக்கு கொழும் பில் பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெற வுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி.எம்.ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படைப்பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள், தூதரகப் பாதுகாப்பு அதிகாரிகள், மதத் தலைவர்கள், அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாத்தறை நகரில் நடைபெறவுள்ள வெற்றி விழா அணிவகுப்பு பிரதான வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என்ற அடிப்படையில் 7832 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவற்றில் 588 அதிகாரிகளும் 7244 வீரர்களும் அடங்குவர்.

கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த வெற்றி அணிவகுப்பு நிகழ்வில் பிரிகேடியர் ஏ.டபிள்யூ.என். ரணவன்ன இரண்டாவது கட்டளை அதிகாரியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த அணிவகுப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் வன்னிப் படையினர் பங்கு கொள்ளவுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது களமுனையில் பயன்படுத்தப்பட்ட சகல கனரக ஆயுத தாங்கி வாகனங்கள், கவச வாக னங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 116 வாகனங் களும், யுத்தக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள், அதிவேக டோரா படகுகள் போன்ற கடற்படைக்குச் சொந்தமான 40 கப்பல்களும் விமானப்படைக்குச் சொந்தமான 35 தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் மாத்தறை கடல் மற்றும் வான் பரப்பில் அணிவகுத்து மரியாதை செய்த வண்ணம் சாகசங்களை காண்பிக்கவுள்ளன. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் பரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply