இலங்கை தமிழர் விடயத்தில் உண்மை நிலையை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் கபட நாடகம் ஆடி ஏமாற்றிய திருமா, வைகோ படுதோல்வி

இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து தமிழகத்தில் வெளிப்படையாகவே தமது அரசியலை நடத்தி வந்த தொல். திருமாவளவன் மற்றும் வைகோ என அழைக்கப்படும் வை. கோபாலசாமி ஆகிய இருவரும் மற்றும் நடிகர் விஜயகாந்த் அணியினரும் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். இவர்களைப் போன்றே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விட்டும், புலிகளுக்கு ஆதரவாக கவி பாடியும், இலங்கைத் தமிழருக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதாகவும் நடித்து வாக்குக் கேட்ட கலைஞர் கருணாநிதியின் தி.மு.க வின் அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

இதிலிருந்து தமிழக மக்கள் இனியும் இத்தகைய உள்ளூர் அரசியல்வாதிகளின் பொய்யுரைகளை நம்பத் தயாரில்லை என்பதை இத்தேர்தல் மூலமாக உணர்த்தியுள்ளனர். இது தமிழகத்திலிருந்து இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் ஏனைய ஏமாற்றுக்காரரான பழ. நெடுமாறன், சீமான் போன்ற வர்களுக்கும் நல்லதோர் படிப்பினை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவு அமைப்புக்களிடமிருந்து நிதியுதவியைப் பெற்று தமிழகத்தில் தமது அரசியலை நடத்திவரும் பழ. நெடுமாறன், திரைப்பட இயக்குநர் சீமான் போன்றவர்களுக்கும், சில திரைப்பட நடிகர்களுக்கும் இத்தேர்தல் முடிவுகள் நல்லதொரு பாடத்தைப் புகட்டியுள்ளன. இதற்காக தமிழக மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவ்வரசியல்வாதிகளின் அறிக்கைகள் காரணமாக இருநாட்டு மக்களிடையேயான நட்புறவே பாதிக்கப்பட்டு வந்தது. இதற்கு இத்தேர்தல் நல்லதொரு தீர்வினைப் பெற்றுத் தந்துள்ளது. உண்மையிலேயே இலங்கையில் தமிழ்

மக்கள் தற்போது அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். காலங்கடந்தாவது இதனைத் தமிழக தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த மாற்றம் இரு நாட்டு பரஸ்பரம் ஒற்றுமைக்கு மேலும் வழிவகுக்கும்.

இதேவேளை நடந்து முடிந்த தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைக் கொண் டிருப்பதால் இனிவரும் காலத்தில் தமிழகத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் மிரட்டல்களுக்குப் பயப்பட வேண்டிய தேவையிருக்காது.

இலங்கை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இதுவரை காலமும் மத்திய அரசாங்கத்தை ஜெயலலிதாவும், கருணாநிதியும் மிரட்டி வந்தனர். இனி அவை எதுவுமே சரிப்பட்டு வராது. சகல அதிகாரங்களும் கொண்ட மத்திய அரசாங்கம் அத்தகைய பிரச்சினைகளுக்கு இலங்கை அரசுடன் இணைந்து உரிய நல்ல தீர்வினைக் காணும் எனும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply