பசில் – விக்னேஸ்வரன் சந்திப்பு பிற்போடப்பட்டது!
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும்,சந்திக்க வைப்பதற்காக கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் மேற்கொண்ட முயற்சிகள் இறுதி வேளையில் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதிலும், இந்தியத் தூதுவர் அவசரமாக புதுடில்லி செல்லவேண்டிய தேவை ஏற்பட்டதால் சந்திப்பு இடம்பெறவில்லை. வடமாகாண சபை எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் குறித்தே இச்சந்திப்பில் ஆராயப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியத் தூதுவர் கொழும்பு திரும்பியதும் இந்தச் சந்திப்பு இடம்பெறும் எனத் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply