ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி அமெரிக்காவுக்கு வருவார்: பான் கி மூன் நம்பிக்கை
இந்தியப் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கும் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க விரைவில் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்று நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திற்கு, குறிப்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்று மிகவும் நம்புகிறோம்.
பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் உச்சி மாநாட்டின்போது அவரை காண்போம் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து இருந்தது. இந்நிலையில் உலகின் பெரிய தலைவரான பான் கி மூன் சார்பில் அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply