இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் யார் என்றும் எங்களுக்கு தெரியாது விசாரணைகள் நடத்தப்படும் : ராணுவம்

இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர்கள் யார், எவர் என்பது தொடர்பில் நாங்கள் அறியோம். என்றும் அவர்களின் பெயர்கள் இசைப்பிரியா, உஷாலினி என்பதைக் கூட ஊடகங்கள் வாயிலாகவே நாம் அறிந்துகொண்டோம் என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக சனல் – 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள், உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது தொடர்பிலும் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply