த. தே. கூட்டமைப்பின் மக்களை விழிப்பூட்டுவதற்குமான விசேட கூட்டங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலும் 31ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் அக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த முக்கிய கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைமப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசக் கடமைகள் என்ன? இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இத்தீர்மானங்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கி பூரணமான நிறைவேற்றப்பட முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இக்கூட்டங்ளில் ஆராயப்படவுள்ளதுடன் பொதுமக்களின் கருத்துகளும் உள்வாங்கப்படவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply