மோடி பதவியேற்பு வைபவம்; சார்க் தலைவர்களுக்கும் அழைப்பு
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை நாவஸ் ஷெரீப் ஏற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த விழாவில் அவர் சார்பில் பிரதிநிதி அல்லது பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் கலந்துகொள்வார்கள் என்றும், வங்கதேசம் சார்பில் பிரதமரின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளதாகவும், சார்க் நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளதாகவும் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு அனுப்பப்பட உள்ளது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மோடி தகவல் தெரிவித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக செய்து வருகிறது. இதற்கு முன்னர் பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதில்லை. தற்போது அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்கும் அரசு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்கும் என்ற தகவலை வெளிப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமருக்கு மோடி அழைப்பு அனுப்ப உள்ளதற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மோடி அழைப்பு விடுத்துள்ளது பாராட்டத்தக்க விஷயம். இரு நாட்டு பேச்சுவார்த்தைக்கு இது ஆரம்பமாக அமையும் என கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் இன்ப அதிர்ச்சியளிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply