உக்ரைன் பிரச்னை: மீண்டும் போர்க்கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனை ஒட்டியுள்ள கடல்பகுதிக்கு தனது போர்க் கப்பல் ஒன்றை அமெரிக்கா அனுப்புகிறது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், இந்த வார இறுதியில் “வெல்லா கல்ஃப்’ என்ற கப்பற்படை போர்க் கப்பல் கருங்கடல் பகுதிக்கு புறப்பட்டுச் செல்லும். கருங்கடலைப் பொருத்தவரை, எங்களது போர்க் கப்பல்கள் சுழற்சி முறையில் போவதும் வருவதுமாக இருக்கும். தற்போதைக்கு நாங்கள் அதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே கருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டேலர் சமீபத்தில் அந்த இடத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்தக் கப்பலுக்கு பதிலாக வெல்லா கல்ஃப் அனுப்பப்படுகிறது.

கருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை நிரந்தரமாக நிலைகொள்வதை நேட்டோ அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என சமீபத்தில் அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுப்படை தளபதி வலியுறுத்தியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply