மோடியின் பதவியேற்புக்கு செல்ல தன்னுடன் வருமாறு சி.வி.க்கு ஜனாதிபதி அழைப்பு

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்விற்குச் செல்லும் தனது குழுவுடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply