ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக கிளர்ச்சி நடந்து வருகிறது. இங்கு அரசு ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை 1½ லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதிபர் ஆதரவு படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிரியாவில் நிலவி வரும் கொடிய நிலையை, மனித உரிமை மீறலை சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல ஏதுவான தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் ஓட்டு போட்டன.

ஆனால் சிரியாவின் நட்பு நாடான ரஷியாவும், சீனாவும் தங்கள் வீட்டோ உரிமையை (மறுப்பு ஓட்டு உரிமை) பயன்படுத்தி விட்டன. இதனால் தீர்மானம் நிறைவேறாமல் போய்விட்டது. சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷியா தனது மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தி இருப்பது இது 4–வது முறை.

ஓட்டெடுப்புக்கு பின்னர் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் பேசும்போது, ‘‘இந்த பூமியில் அமைந்துள்ள நரகத்தில் (சிரியாவில்) வாழுகின்ற மக்களுக்கு நீதி வழங்குவதில் நாம் எப்படி தோற்றுப்போனோம் என்று நமது பேரக்குழந்தைகள் இப்போது முதல் இனி வருங்காலத்திலும் நம்மிடம் கேள்வி கேட்பார்கள்’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply