இந்திய மருத்துவர்கள் குழு திருகோணமலை செல்கிறது

வட இலங்கை மோதல்களில் இடம்பெயர்ந்துவருகின்ற மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இந்திய மருத்துவக் குழு ஒன்று இம்மாதம் 9ஆம் தேதி இலங்கை செல்லவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், இலங்கை அரசாங்கத்துடன் ஏற்பட்ட இணக்கத்துக்கு ஏற்ப இலங்கை வரவுள்ள இந்த அவசர மருத்துவ குழு, திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையில், மருத்துவமனை ஒன்றையும் ஏற்படுத்தி, அந்த பகுதியில் உள்ள இலங்கை சுகாதார அமைச்சின் வசதிகளுக்கு உதவவுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தக் குழுவில் அனுபவமிக்க மருத்துவர்கள் 9 பேரும், அவர்களுக்கு உதவியாக துணை மருத்துவ அதிகாரிகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் வருவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

தமது பணிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் அந்தக் குழு தம்முடன் எடுத்துவரும் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply