ஆப்கானிஸ்தானுக்கு ஒபாமா ரகசிய விஜயம்

அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா ரகசிய விஜயமாக ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ரம் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய ஒபாமா அங்குள்ள தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்திற்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர் படையினரிடம் இருந்து விவாதித்ததாக தெரிகிறது. 13 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக அங்கிருந்து குறைக்கக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு மீதமுள்ள ராணுவ வீரர்களில் எவ்வளவு பேர் அங்கேயே தங்க உள்ளனர் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பபடும் என ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமா ஆப்கனுக்கு வந்தாலும் தலைநகர் காபூலுக்கு சென்று அந்நாட்டு அதிபரான ஹமிது கர்சாயையோ, அந்நாட்டு அரச உயரதிகளையோ அவர் சந்திக்கவில்லை. இதன் மூலம் அந்நாட்டில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவருடன் நட்பு பாராட்ட ஒபாமா முடிவு செய்தள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒபாமா பக்ரம் வந்த போது தங்கள் நாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அமெரிக்காவின் இசை நட்சத்திரமான பிராட் பெயிஸ்லியை அழைத்து வந்தததாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply