இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 23 கபினெட் அமைச்சர்களும், 10 தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்களும் 12 இணை அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றனர். 23 கபினெட் அமைச்சர்களை பிரதமர் மோடி நியமித்திருந்தாலும், தனியார் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சு மற்றும் அணு சக்தி திணைக்களம் மற்றும் விண்வெளித் திணைக்களம் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளார். அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படாத அமைச்சுக்களை நரேந்திரமோடியே வகிப்பார் என்றும், முக்கிய கொள்கைகள் தொடர்பான முடிவுகளை அவரே எடுப்பார் என்றும் இந்தியச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சில அமைச்சுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு பொறுப்புக்கள் ஒரே அமைச்சர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு பிரதான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகவும், சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகார அமைச்சராகவும், நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அருண் ஜெட்லி நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் ரவிசங்கர் பிரசாத் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு

உமாபாரதி – நீர்வளத்துறை மற்றும் ஆறு அபிவிருத்தி அமைச்சர்

சதானந்த கவுடா – ரயில்வே துறை

கட்கரி – தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை

வெங்கய்யா நாயுடு – ஊரக வளர்ச்சித்துறை, நகர்புற வளர்ச்சித்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள்

நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மையினரின் நலத்துறை

ஸ்மிருதி இரானி – மனிதவள மேம்பாட்டுத் துறை

கோபிநாத் முன்டே – ஊரக வளர்ச்சித்துறை

ராம்விலாஸ் பாஸ்வான் – உணவு மற்றும் நுகர்பொருள்துறை

மேனகா காந்தி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்துறை

ஹர்ஷவர்தன் – சுகாதாரத்துறை

அனந்த் குமார் – இரசாயன மற்றும் உரத்துறை

அஷோக் கஜபதி ராஜூ – சிவில் விமானத்துறை

ராதா மோகன் சிங் – விவசாயத்துறை

அனந்தே கீதி – கனரகத் தொழில்துறை பொதுநிறுவனத்துறை

ஹர்சிம்ரட் கெளர் – உணவு தொழிற்துறை

நரேந்திரசிங் டோமர் – சுரங்க மற்றும் உருக்குத்துறை மற்றும் தொழிலாளர் துறை

ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நலன்துறை

கல்ராஜ் மிஷ்ரா – சிறிய, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில்துறை

இதனைவிட நிர்மலா சீதாராமன் வணிகவரி மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும், பொன்.இராதாகிருஷ்ணன் கனகர தொழில்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

மோடியின் அமைச்சரவையில் 7 பெண்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராக நஜ்மா ஹெப்துல்லா (74வயது) காணப்படுவதுடன், குறைந்த வயது அமைச்சராக ஸ்மிருதி இரானி (38வயது) காணப்படுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply