ஏமனில் அல்கொய்தா முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஏமன் ராணுவம் அதிரடியாக களம் இறங்கி உள்ளது. ஏமனில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பெய்ட் அல்–அதாரி மற்றும் பாணி ஹரம் மாவட்டங்களில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் சலே அல் டெயிஸ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையில் ராணுவ அதிகாரிகள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிரவாத முகாம்களில் இருந்து வெடிபொருட்களும், கார் குண்டுகளும், பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply