இலங்கையில் வாகனங்களில் ஒலியை எழுப்புவதில் புதிய கட்டுப்பாடு 

வாகன ஹோர்ன் களின் மூலம் எழுப்பப் படும் ஒலியை கட்டுப் படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். ஹொர்ன்களை பயன்படுத்துவது, விபத்துகளை தவிர்ப்பதற்காகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது தேவையான இடத்தை பெற்றுக் கொள்வதற்காகவுமே பயன்படுத்த வேண்டும். எனினும் அடுத்த பஸ் வண்டி சாரதிக்கு வணக்கம் சொல்லவும். நலம் விசாரிக்கவும், தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றவும் மற்றைய வாகனத்தை விட தன்னிடம் ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன் உள்ளது என்பதை காட்டுவதற்காகவே ஹோர்ன்களை பயன்படுத்துகிறார்கள்.

பல்வேறு விதமான ஒலியை எழுப்பக்கூடிய, விதம் விதமான ஹோர்ன்களை பயன்படுத்துகிறார்கள். இனி அவ்வாறில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட 105 டெசிபல் அலகைக் தொண்டதாக ஒலி எழுப்ப வேண்டும் என்ற சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply