சூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்கி அசத்திய சீனர்

சீனாவை சேர்ந்த ஹீ லியாங்கய் சூட்கேஸை கொண்டு பேட்டரியால் ஓடும் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தன்னையும், தன்னுடைய உடமைகளையும் கொண்டு செல்ல முடிவதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த ஹீ லியாங்கய், தனது கண்டுபிடிப்பு குறித்து சாங்ஷா ரெயில் நிலையத்தில் செயல் விளக்கமளித்தார். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு அந்த ஸ்கூட்டரிலேயே அவர் சென்றார். 7 கிலோ எடை கொண்ட அந்த ஸ்கூட்டரில் இரண்டு பேர் பயணம் செய்யமுடியும்.

ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் 20 கிலோமீட்டரை அந்த ஸ்கூட்டர் சென்றடையும். அதில் ஜி.பி.எஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளதுடன் அலாரமும் அமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியால் இயங்குவதால் இதை ரீசார்ஜ் செய்யவேண்டும். விவசாயியான இவர் இந்த சூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்க 10 வருடங்கள் ஆனதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply