இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு உதவ விரும்புவோர் அரசின் மூலமே உதவிகளை வழங்க முடியும்:கெஹலிய ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்குமென அமைச்சரும் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல இன்று  தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கல்வியை இடை நடுவில் கைவிட்டுத் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இலங்கையுடனான பல நட்பு நாடுகள் இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன் அவ்வாறான உதவிகளை அவர்கள் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் ஊடாக வழங்குவதனை அரசாங்கம் என்ற வகையில் அனுமதிக்க முடியாது. இவர்கள் உதவி செய்ய விரும்பினால் இலங்கை அரசின் ஊடாகவே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இராணுவ தரப்பு ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜானக நாணயக்கார இங்கு கருத்துத் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னும் 45 சதுர கிலோ மீற்றரே உள்ளது. இராணுவத்தின் 58 ஆவது 53 ஆவது பிரிவுகள் தற்போது நந்திக் கடல் ஏரியை நோக்கி தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதெனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply