ஜூன் 3இல் மோடியை டில்லியில் சந்திக்கிறார் ஜெயா!

இந்திய புதிய பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஜுன் 3ம் திகதி அன்று சந்திக்கவுள்ளார். தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மோடியிடம் ஜெயலலிதா மனுவொன்றை கையளிக்கவுள்ளார். தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வலியுறுத்தவுள்ளார்.

நரேந்திரமோடி மே 26ம் திகதி அன்று பதவியேற்றபோது அந்த விழாவில் ஜெயலலிதா பங்கேற்பதாக இருந்தது. இலங்கை ஜனாதிபதி அந்த விழாவில் பங்கேற்றதால் அந்த விழாவை புறக்கணித்தார் ஜெயலலிதா.

இந்நிலையில் மோடி பதவி ஏற்று, ஆட்சிப்பொறுப்பேற்றதும் அவரை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply