மோடி – ஜெயா ஜூன் 03 இல் சந்திப்பு மீனவர் பிரச்சினை குறித்தும் பேசுவர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3ஆம் திகதி டில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 26ம் திகதி நரேந்திர மோடி பிரதமராக பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்துவிட்டார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்துத் தாக்கப்படும் மற்றும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால், மீனவர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரை அவர் கேட்டுக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது நடந்த விழாவுக்கு மோடியும், குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றபோது அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply