வவுனியா வங்கி முகாமையாளரை கடத்தியோர் கைது.

வவுனியாவில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட வங்கி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தி கப்பம் கோரிய நபர்களும் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் கடத்தியோர் முப்பது கோடி ரூபாய் கப்பம் கோரியதாகவும் அதற்கு வங்கி நிர்வாகம் மறுப்புத் தெரிவிக்கவே உறவினர்களிடம் ஒன்பதரை இலட்சம் பணம் கப்பமாக கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து கப்பப் பணத்தினை வழங்குவதற்கு உறவினர்கள் சென்றதாகவும் கப்பம் பெற வந்த நபர்களை சிவில் உடையில் பதுங்கியிருந்த பொலிஸார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தினை அடுத்து வவுனியாவில் அமைந்திருந்த வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாக தெரியவருகின்றது.

மேற்படி, வவுனியா வங்கி முகாமையாளரை கடத்தி கப்பம் கோரிய சம்பவத்தை நெருப்பு இணையத்தளம் சிறீ-ரெலோ உறுப்பினர்கள் செய்ததாக `பொய்ச்செய்தி` வெளியிட்டு சுயஇன்பம் கண்டுகொண்டது.

வவுனியாவில் நிகழ்ந்த பல ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற சமூக விரோத செயல்களின் பின்னால் இருக்கும் `தமிழ்க்குழு` குறித்து வவுனியா மக்கள் நன்கு அறிவர். இலங்கையில் உள்ள உள்ளூர் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் மட்டும் அல்ல சர்வதேச கீர்த்தி மிக்க மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் ஆதாரங்களுடன் பல அறிக்கைகள் வெளியிட்டு உள்ளன.

யுத்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இடம்பெற்றும் அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோருதல் போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற விதத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம்பிள்ளை அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply