கால்பந்து உலகக் கோப்பை: கேமரூனை வென்றது மெக்ஸிகோ

பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது. போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் இதுவரை மெக்ஸிகோ, அப்ரிக்க அணியொன்றை தொற்கடித்தது கிடையாது . இந்தப் போட்டியிலும் நடுவரின் முடிவு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இடைவேளைக்கு முன்னர் மெக்ஸிகோ அணியினர் இருமுறை பந்தை கோல் வலைக்குள் அடித்தனர். எனினும் இரண்டையும் ஆஃப்-சைட் என்று கூறி நடுவர் நிராகத்துவிட்டார்.

இந்தப் போட்டிக்கு கொலம்பியா நாட்டின் வில்மார் ரோல்டான் களநடுவராக இருந்தார்.

ஆட்டத்தின் பெரும்பாலான நேரம், பந்து மெக்ஸிகோ வீரர்களிடமே இருந்தது என்று ஃபிஃபாவின் புள்ளி விபர வரைபடம் கூறுகிறது.

இடைவேளையின் போது இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையே இருந்தது.

அடுத்த போட்டி ஸ்பெயின்–நெதர்லாந்து அணிகளுக்கு இடையே சால்வடோர் நகரில் லண்டன் நேரம் இரவு 8 மணிக்கும், ஆஸ்திரேலியா-சிலி அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 11 மணிக்கு குயேபா நகரிலும் நடைபெறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply