அமெரிக்காவில் ஜார்ஜ்புஷ்சை விட ஒபாமா செல்வாக்கு சரிவு

அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு குறித்து சமீபத்தில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. சர்வதேச நிறுவனம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் தற்போதைய அதிபர் ஒபாமா இடையே செல்வாக்கு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதில், அதிபர் ஒபாமாவின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் மட்டும் கருத்து தெரிவித்தனர். ஆனால் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கு ஆதரவாக 51 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். இது கடந்த 2009–ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பை விட கூடுதலாகும்.

அப்போது, இவருக்கு 46 சதவீதம் மட்டுமே ஆதரவு இருந்தது. தற்போது தான் அமெரிக்க மக்களிடையே ஒபாமாவின் செல்வாக்கு குறைந்து இருப்பதாக சி.என்.என். வாக்கெடுப்பு இயக்குனர் கீட்டிங்க ஹோலண்டு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply