குழுவின் வருகையை அரசு தடுத்தே தீரும் : அமைச்சர் நிமால்

சர்வதேச விசாரணைக் குழு இலங்கை வருவது தொடர்பிலான பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில், அந்தக் குழு பற்றியோ அவர்கள் முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் குறித்தோ ஆராய்வது தற்போதைக்கு அவசியமற்றது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். விசாரணைக் குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் என சுட்டிக் காட்டிய அமைச்சர், அது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதிலேயே எமது முழுக் கவனமும் உள்ளது என்றும் கூறினார்.

சர்வதேச விசாரணைக் குழு இலங்கைக் குள் வருவார்களென்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தயாராவது அநாவசியமானதும் அர்த்தமற்றதுமான செயலாகும் என்றார். விசாரணைக் குழுவின் வருகையை பாராளுமன்ற தீர்மானத்திற்கூடாக தடுப்பதுவே எமது பிரதான குறிக்கோளாக இருப்பதனால் அதற்குரிய செயற்பாடுகளி லேயே எமது முழுக் கவனமும் ஒரு முகப்படுத்தப் பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply