பிரதமராகியும் மோடி, பிரசார மனநிலையிலேயே இருக்கிறார்: காங்கிரஸ் கேலி
நாட்டின் பிரதமரானதையே நம்ப முடியாமல் நரேந்திர மோடி இன்னும் பிரசாரத்தில் தான் குறியாய் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. கோவாவில் நேற்று பா.ஜ.க. தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கஜானாவை காலியாக்கி விட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, ‘தான் பிரதமர் ஆகிவிட்டதை மோடி இன்னும் நம்பவில்லை என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பிரசார மனநிலையிலேயே இருக்கிறார்.
மோடி ஒரு நாட்டின் பிரதமர். பிரதமராக அவர் செயல்பட வேண்டுமேயொழிய எதிர்க்கட்சித் தலைவராக அல்ல என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மந்திரிகள் 10 நாட்களுக்கு முன்னதாகவே பிரதமரின் அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். பயணம் முடிந்து நாடு திரும்பியதும், பயண நோக்கத்தின் முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையையும் அவர் விமர்சித்துள்ளார்.
மோடியின் அரசு மக்களின் கண்களில் மண்ணை தூவ முயற்சிக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் மந்திரிகள், அந்த திட்டத்தை பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்து, அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு அறிவிக்காமல் யாரும் திடீரென்று வெளிநாடுகளுக்கு சென்று விட முடியாது என்று ஷகீல் அகமது கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply