போரினால் சிதைந்துள்ள தெற்கு சூடானில் மரணத்தின் விளிம்பில் 50 ஆயிரம் குழந்தைகள்
சூடானிலிருந்து பிரிந்த தெற்கு சூடான் ஸ்திரத்தன்மையை அடையும்முன்னரே அந்நாட்டின் அதிபர் சல்வார் கிர்ருக்கும், முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சருக்கும் இடையே நடைபெறும் அதிகார சண்டைகள் பொதுமக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. இந்த போரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் உணவு, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே உதவி எதிர்பார்த்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தால் அந்நாடு பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று சர்வதேச சமூக உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக்கூடும். தகுந்த உதவி கிடைக்கவில்லை என்றால் 50,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த ஆண்டு இறக்கக்கூடும் என்று தெற்கு சூடானுக்கான ஐ.நா உதவிக் குழுவின் தலைவர் டோபி லான்சர் தெரிவித்தார். இந்த அமைப்பு அங்கு பசி, வன்முறை மற்றும் நோய் தாக்கிய 3.8 மில்லியன் மக்களுக்கான உதவித் திட்டத்தைத் துவங்கியுள்ளது.
பிரதமர் சல்வார் கிர்ரும், ரீக் மச்சரும் இந்த வாரமும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டபோதிலும் ராணுவ வெற்றிக்கும் சாத்தியம் இருப்பதாகவே பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் ஏற்கனவே நடந்த யுத்தமும், இட மாறுதல்களும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது என்று புள்ளிவிபரங்களை வெளியிட்டார். இதற்கு முன்னால் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அமைதி ஒப்பந்தங்களும் சில மணி நேரங்களிலேயே முறிந்துபோனது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply