ஜனாதிபதி தேர்தல் பாப்பரசர் வருகைக்கு பின் இடம்பெறலாம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெறலாமென ஜனாதிபதி தரப்பு  செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக எதிர்வரும் நவம்பரில் அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலானது இரண்டு மாதம் பிற்போடப்படுமென அரச ஊடகங்களிலிருந்து அறியவருகிறது. பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையே இதற்கான காரணமாகும். பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது இக்கட்டானது என்றும் அவரின் வருகைக்குப் பின் தேர்தலை நடத்துவதே பொருத்தப்பாடுடையதென்றும் சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.இதன் காரணமாக ஜனவரி மாத ஜனாதிபதி தேர்தலானது தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு பின் இடம்பெறலாம் என அறியமுடிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply